Wednesday, December 28, 2011
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்
Saturday, December 10, 2011
டிசம்பர் 6 - த.மு.மு.க.வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திருவாரூர்.
‘டிசம்பர் 6’ - ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் வரும்போது, நம் ஒவ்வொருவருடைய கண் முன்னே வருவது பாபரி மஸ்ஜித்-தின் மீது விழுந்த கடப்பாரைகள் தான். காரணம், அவை ஒரு கட்டிடத்தின் மீது விழுந்தவை அல்ல... ஒவ்வொரு இஸ்லாமியரின் உயிரினும் மேலான இறை இல்லத்தின் மீது விழுந்தவை... இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த சவுக்கடி. மத ஒற்றுமைக்கு பெயர் எடுத்த இந்தியாவிற்கு, உலக நாடுகள் முன் தலைகுனிவை ஏற்படுத்திய செயல் அது...
வருடங்கள் 19 ஆயினும், இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ‘லிபர்ஹான் ஆணையம்’ 17 ஆண்டுகளில் 48 முறை நீட்டிப்பு பெற்று, இந்தச் சம்பவத்தின் மீது தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த்தது. அதில், இந்தியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் துணை பிரதமர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் மத துவேஷ எண்ணம் கொண்ட பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் 68 பேர் மீது குற்றம் சுமத்தியது.
அதோடு மட்டுமல்லாமல், அயோத்தியில் ‘பாபரி மஸ்ஜித்’ அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தம்? என்று தொடரப்பட்ட வழக்கில், பன்னெடுங்காலத்திற்குப் பிறகு, அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், இறை இல்லத்தை இடித்த கயவர்களுக்கு, அவ்விடத்தில் 3-ல் 2 பங்குகளும், இழந்தவர்களுக்கு 1 பங்கும் என பாகப்பிரிவினைத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது நடுநிலைவாதிகள் யாராலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு தீர்ப்பாகும். எனவே, இதனை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில், இஸ்லாமிய சமுதாயம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம், புராதான கதைகளுக்கும், மத நம்பிக்கைகளுக்கும் இடம் தராமல், இந்திய உரிமையியல் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்கக்கோரியும், ‘பாபரி மஸ்ஜித்’-தை இடித்த அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 நபர்களின் மீது விரைந்து நடவடிக்கைக் கோரியும்,
இந்த நாட்டில் உற்றார் உறவினராய், சகோதர, சகோதரிகளாய் வாழ்ந்து வரும் இந்து, முஸ்லிம் சமுதாய மக்களை பிரித்தாளும் கொள்கையுடன் செயல்பட்டு, சிறுபான்மை இனத்தவர்களுக்கு தாங்களே பாதுகாப்பு என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, சங் பரிவார் அமைப்புகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியையும் கண்டித்து,
த.மு.மு.க.-வின் சார்பாக திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, டிசம்பர் 6 2011, செவ்வாய்க்கிழமைக் காலை ‘ சிறப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ’ நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், முஹர்ரம் 10-ம் நாள் நோன்பு வைத்துக் கொண்டும், தங்களின் கைக்குழந்தைகளுடனும், ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமியரும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் த.மு.மு.க. - ம.ம.க. வின் கிளைக் கழக நிர்வாகிகள் தலைமையில் கலந்து கொண்டனர்.
காலை 11 மணிக்கு ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, த.மு.மு.க. திருவாரூர் மாவட்டத் தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
தலைமையுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் சகோ. பிரபுதாஸ், சகோ. மன்னை செல்லசாமி, ம.ம.க-வின் மாவட்ட செயலாளர் சகோ. முஹம்மது மாலிக் ஆகியோரின் கண்டன உரைகளுடன் தொடர்ந்தது.
இடையிடையே, கீழ்க்கண்ட வாசகங்கள் அடங்கிய ஆர்ப்பாட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்ட கோஷங்களை, சகோ. நாச்சிக்குளம் தாஜுதீன், மாவட்ட உலமாக்கள் அணித் தலைவர் சகோ. பி. எஸ். அஹமது, சகோ. குத்துபுதீன், சகோ. அடியற்கை ஜலீல், சகோ. ஹலீல் ரஹமான், முத்துப்பேட்டை சம்சுதீன், மாவட்டத்தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் ஆகியோர் முன்னின்று எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் நடுவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரிடம், மாவட்டத்தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் குத்துபுதீன், சாகுல், ஃப்ஜ்ருல் ஹக், வழக்கறிஞர். பிரபுதாஸ் மற்றும் வழக்கறிஞர். தீன் முஹம்மது ஆகியோர் அடங்கிய குழு சென்று அளித்தது. விடுமுறை தினமாக இருந்தபோதிலும், நீதிமன்றப் பதிவாளர் அவர்கள் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்து, இந்த மனுவைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய நிகழ்வாக, த.மு.மு.க.-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் சகோ. கோவை. முஜிபுர்ரஹ்மான் அவர்களின் எழுச்சிமிகு கண்டன உரை அமைந்தது.
அவரைத் தொடந்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினரும் ஆசிரியருமான தோழர். எஸ். தியாகராஜன் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார்.
இறுதியாக, மாவட்டத் துணைத் தலைவர் சகோ. ஃப்ஜ்ருல் ஹக் அவர்கள் நன்றிக் கூறி துஆ ஓத, ஆர்ப்பாட்டம் மதியம் ஒரு மணியளவில் முடிவடைந்தது.
ஆர்ப்பாட்டக் களத்தில் சில பதிவுகள்...
செய்தி மற்றும் படங்கள் :ஆரூர். மு. அஜ்மல் கான் ஜபருல்லா.
Thursday, November 10, 2011
குப்பைமேடாகும் குடியிருப்புப் பகுதி - கண்டு கொள்ளாத திருவாரூர் நகராட்சியின் ஆணவப்போக்கால் தொடரும் அவலம்
**
நீங்கள் இந்த புகைப்படங்களில் பார்ப்பது, திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட, 9-வது வார்டு, ராமகே ரோட்டின் நுழைவாயில்.
**
இங்கு, தினந்தோறும் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை, கொட்டிவைக்கின்றனர் நகராட்சி ஊழியர்கள். அதை அப்புறப்படுத்துவதில் மிகுந்த அலட்சியம் காட்டுகின்றனர். அப்படியே, அப்புறப்படுத்த வந்தாலும், லாரியை சாலையை மறித்து நிறுத்திக்கொள்கின்றனர். பொதுமக்களோ, மற்ற வாகனங்களோ சாலையில் செல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
**
இந்த பகுதியில், கொசு பெருகிவருகின்றது. சாலையைக்கடக்க முடியாமல், துர்நாற்றம் வீசுகின்றது. இப்பகுதியில் வசிப்போர் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
இதைப் பற்றி, சென்றமுறை பதவியில் இருந்த, நகர்மன்ற உறுப்பினரிடமும்,நகராட்சி ஆணையரிடமும், பலமுறை புகார் செய்தும், செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் ஆகியது. பலனேதுமில்லை.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய உறுப்பினராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் பதவியேற்றப்பிறகும் இந்த அவல நிலையே தொடர்கிறது.
இத்தனைக்கும் இந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது.
ஆணையருக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், இந்தப் பகுதி மக்களின் துயரம் என்றுதான் கண்களில் படுமோ? இந்த நிலை என்றுதான் மாறுமோ?!
ஆணையாளரே! அரசு வாகனத்தில், சிமிண்ட் சாலைகளாக மாற்றப்பட்ட, முக்கிய வீதிகளில் மட்டும் உலா வந்தால் போதாது. வரி கட்டும் மக்களின் துயரங்களைத் தீர்க்கவும் செய்யணும்.
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி உல்லாசமாய் இருப்பவர்களுக்கு இது என்று புரியுமோ?!
**புகைப்படங்கள் எடுத்தது 10.11.2011 அன்று காலை.
Monday, October 31, 2011
உள்ளாட்சித் தேர்தல் - 2011 -முடிவுகள் - திருவாரூர் நகராட்சி நிலவரம்
நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலில், திருவாரூர் நகராட்சியில், நகர்மன்றத் தலைவர் பதவிக்கு அ.இ.அ.தி.மு.க.-வின் வேட்பாளராகப் போட்டியிட்ட வழக்கறிஞர்திரு.வி.ரவிச்சந்திரன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.-வின் வேட்பாளரும், தி.மு.கழகத்தின் நகரச் செயலாளருமான திரு.இரா.சங்கர் அவர்களை விட 1098 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நகரமன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு:
1. வி.ரவிச்சந்திரன் (அ.இ.அ.தி.மு.க.) - 11858 Elected
2. இரா.சங்கர் (தி.மு.க.) - 10760 Not Elected
3. பாலாஜி(எ)எம்.எத்திராஜ் ( தே.மு.தி.க.) - 1846 Deposit Lost
4. பி.ஜி.கருத்திருமன் ( காங்கிரஸ்) - 954 Deposit Lost
5. ரயில்.டி.பாஸ்கர் ( ம.தி.மு.க.) - 918 Deposit Lost
6. என். அக்பர் அலி ( பா.ம.க.) - 586 Deposit Lost
7. தே. தேவக்குமார் ( சுயேட்சை) - 269 Deposit Lost
8. ஆர்.பிங்களன் ( பா.ஜ.க.) - 191 Deposit Lost
மொத்தமுள்ள 30 வார்டுகளின் நிலவரம் பின்வருமாறு: (அடைப்புக்குறிக்குள் அவர்கள் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை)
வார்டு எண் 1-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் ஆர்.டி.உமாமகேஸ்வரி (679)
வார்டு எண் 2-ல் தி.மு.க.-வின் எம்.லெஷ்மி பிரியா (661)
வார்டு எண் 3-ல் தி.மு.க.-வின் டி.செந்தில் (421)
வார்டு எண் 4-ல் சுயேட்சை வேட்பாளர் ஜி.வரதராஜன் (537)
வார்டு எண் 5-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் கே.மலர்விழி (534)
வார்டு எண் 6-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் எஸ்.பிரேமா (598)
வார்டு எண் 7-ல் மனிதநேய மக்கள் கட்சி-யின் ஐ.கலிபுல்லா (314) - *சுயேட்சை சின்னம்
வார்டு எண் 8-ல் இ.தே.காங்கிரஸ்-ன் எம்.ஜாஹிர் ஹுசேன் (184)
வார்டு எண் 9-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் வி.பாஸ்கர் (296)
வார்டு எண் 10-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் மாஸ்டர்.எம்.தண்டாயுதபாணி (257)
வார்டு எண் 11-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் ஆர்.சித்ரா (360)
வார்டு எண் 12-ல் தி.மு.க.-வின் டி.ராஜகுமாரி (230)
வார்டு எண் 13-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் ஆர்.தெட்சிணாமூர்த்தி (583)
வார்டு எண் 14-ல் தி.மு.க.-வின் பி.ஜெயமணி(343)
வார்டு எண் 15-ல் தி.மு.க.-வின் என்.ராமு (480)
வார்டு எண் 16-ல் இ.தே.காங்கிரஸ்-ன் எம்.சம்பத் (322)
வார்டு எண் 17-ல் தி.மு.க.-வின் எம்.தேவி (475)
வார்டு எண் 18-ல் தி.மு.க.-வின் என். அசோகன் (501)
வார்டு எண் 19-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் எஸ்.சாந்தி (453)
வார்டு எண் 20-ல் தி.மு.க.-வின் ஜெ.காமராஜ் (416)
வார்டு எண் 21-ல் தி.மு.க.-வின் பி.ரெகுபதி (445)
வார்டு எண் 22-ல் தே.மு.தி.க.-வின் மோ.பிரசன்னா (340)
வார்டு எண் 23-ல் தி.மு.க.-வின் ஜெ.ஜமால் முகம்மது (519)
வார்டு எண் 24-ல் தி.மு.க.-வின் டி.கல்யாணி (282)
வார்டு எண் 25-ல் தி.மு.க.-வின் எஸ்.அன்வர் உசேன் (379)
வார்டு எண் 26-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் எஸ்.குருசாமி (439)
வார்டு எண் 27-ல் தி.மு.க.-வின் சு.தாஜுதீன் (441)
வார்டு எண் 28-ல் தி.மு.க.-வின் ஜெ.அய்யனார் (328)
வார்டு எண் 29-ல் தி.மு.க.-வின் வே.செந்தில் குமார் (463)
வார்டு எண் 30-ல் தி.மு.க.-வின் கே.முருகையன் (195)
ஆகியோர் நகரமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
மொத்தமுள்ள 30 வார்டுகளில்,
தி.மு.க. - 16 வார்டுகள்
அ.இ.அ.தி.மு.க. - 9 வார்டுகள்
இ.தே.காங்கிரஸ் - 2 வார்டுகள்
தே.மு.தி.க. - 1 வார்டு
மனிதநேய மக்கள் கட்சி (சுயேட்சை சின்னத்தில்) - 1 வார்டு
சுயேட்சை - 1 வார்டு
ஆகியவற்றை கைப்பற்றியுள்ளன.
தலைவர் பதவியை தி.மு.க. இழந்தாலும், பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக தொடர்கிறது.
மீண்டும் ஒரு முறை, நகர மக்கள், திருவாரூர் தி.மு.க.-வின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளனர்.
கொடிக்கால்பாளையம் த.மு.மு.க.-ம.ம.க.-வினரின் சமூகப் பணி
தொடர்ந்து பெய்துவரும் மழையால், கொடிக்கால்பாளையம், மேலத்தெரு மையவாடி முனையிலிருந்து, ஜும்’ஆ பள்ளிவாசல் வரையிலும் சாலையில் தேங்கியிருக்கும் மழைத்தண்ணீரால், போக்குவரத்து வெகுவாக பாதிப்படைந்து, அதில் மக்கள் சென்று வர மிகுந்த சிரமப்படும் நிலையில், இன்று (27-10-2011, வியாழக்கிழமை) காலை நமது 7-வது வார்டு கவுன்சிலர் ஐ. கலிபுல்லா மற்றும் த.மு.மு.க. மற்றும் ம.ம.க. சகோதரர்கள், த.மு.மு.க. மாவட்டத் தலைவர் முஜிபுர்ரஹ்மான், ம.ம.க. நகர செயலாளர் காதர் ஆகியோர் மேற்பார்வையில், சாலையில் தேங்கியிருக்கும் மழைத் தண்ணீரை வடியச் செய்யும் பணியில் கொட்டும் மழையிலும் ஈடுபட்டனர்.
களத்தில் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள்
களத்தில் ம.ம.க.-வின் திருவாரூர் நகரமன்றத்தின் 7-வது வார்டு உறுப்பினர் ஐ. கலிபுல்லா அவர்கள்
களத்தில் ம.ம.க.-வின் திருவாரூர் நகரமன்றத்தின் 7-வது வார்டு உறுப்பினர் ஐ. கலிபுல்லா மற்றும் ம.ம.க.-வின் திருவாரூர் நகர செயலாளர் காதர் ஆகியோர்
படங்கள் மற்றும் செய்தி : ஆரூர். மு. அஜ்மல்கான்.
கொடிக்கால்பாளையத்தில் திருவாரூர் நகரமன்றத் தலைவரின் ஆய்வுப் பணி - 31 அக்டோபர் 2011
நகர்மன்றத் தலைவர் திரு. வி. ரவிச்சந்திரன்
திருவாரூர் நகராட்சியின் 7-வது மற்றும் 8-வது வார்டுகளை உள்ளடக்கிய கொடிக்கால்பாளையம் பகுதியில், மேலத்தெரு, தெற்குத் தெரு, கடைவீதி, நடுத்தெரு மற்றும் வடக்குத் தெரு ஆகிய இடங்களில் இன்று காலை, திருவாரூர் நகராட்சிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நகர்மன்றத் தலைவர் திரு. வி. ரவிச்சந்திரன் அவர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
நகர்மன்றத் தலைவர் திரு. வி. ரவிச்சந்திரனுடன் (இடமிருந்து 2-வது) 7 மற்றும் 8-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் ஐ. கலிபுல்லா (இடது) மற்றும் எம். ஜாகிர் உசேன் (வலது புறம்)
கொடிக்கால்பாளையத்தில் நடைபெற்றுவரும் சிமெண்ட் சாலைப் பணிகள், இப்பகுதியில் கால்வாய்கள், நகர்மன்றத் தலைவருடன் 8-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம். ஜாகிர் உசேன்
மழைநீர் வடிகால்கள், சாக்கடை வசதி, சேர்ந்திருக்கும் குப்பைகளை அகற்றுவது ஆகியன பற்றிய ஆய்வுகள் நடைப்பெற்றது.
சிமெண்ட் சாலைப் போடும் பணி இன்னும் தொடங்கப்படாமல் இருக்கும் கொடிக்கால்பாளையம் நடுத்தெருவின் சீரழிந்த நிலைமை.
பாதிவேலை முடிந்த நிலையில் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு
இவருடன் 7-வார்டு உறுப்பினர் ஐ. முகம்மது கலிபுல்லா, 8-வது வார்டு உறுப்பினர் எம். ஜாகிர் உசேன் மற்றும் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான், ம.ம.க. நகர செயலாளர் காதர் ஆகியோர் உடன் சென்றனர்.
- ம.ம.க. நகரச் செயலாளர் காதர் அவர்களின் படங்கள் மற்றும் குறிப்புகளுடன்
ஆரூர். மு. அஜ்மல் கான்.
நகர்மன்றத் தலைவருடன் ம.ம.க. திருவாரூர் நகர செயலாளர் காதர் அவர்கள்
நகர்மன்றத் தலைவருடன் த.மு.மு.க. திருவாரூர் மாவட்டத் தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் அவர்கள்